அரியலூரில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணாசிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-12-02 22:50 GMT
அரியலூர்,

அரியலூர் அண்ணாசிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். இதில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை போலீசாரும், துணை ராணுவமும் தாக்கியதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், திராவிடர் கழகத்தினர் கலந்துகொன்டனர்.

இதேபோல் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே, ஆறுகள் ஏரிகள் பாதுகாப்பு விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் கையில் ஏர்கலப்பையுடன் டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை அரியலூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் மீன்சுருட்டி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்