காஞ்சீபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் பலி

காஞ்சீபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த வேளாண் துறை பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-12-06 23:45 GMT
கழிவு நீர் தொட்டியில்,..
காஞ்சீபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டரை ஆசிரியர் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா (வயது 24). மாற்றுத்திறனாளியான இவர் காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூரில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அப்போது அங்குள்ள கழிவு நீர் தொட்டியின் மீது கால் வைத்த போது ஓடு உடைந்து சரண்யா கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

சாவு
உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரண்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான சரண்யா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்