சோழிங்கநல்லூரில் அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு

சோழிங்கநல்லூரில் அரசு பஸ் மோதியதில் மீன் வியாபாரம் செய்த மூதாட்டி பலியானார்.;

Update:2020-12-08 05:06 IST
பஸ் மோதியது
கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்தவர் ஊத்துகாட்டாம்மாள் (வயது 60). மூதாட்டியான இவர், மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில், மூதாட்டி நேற்று மீன் கூடையை தலையில் வைத்து கொண்டு சோழிங்கநல்லூரில் பழைய மகாபலிபுரம் சாலையை கடக்க முயன்றபோது, சோழிங்கநல்லூரிலிருந்து கேளம்பாக்கம் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது.

மூதாட்டி பலி
இச்சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு, ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்