காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்

உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2020-12-13 20:15 GMT
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் துளசி பிரசாதங்களை வழங்கினர். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இருந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இறைவன் நம்மை பாதுகாப்பார். ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். பல நாடுகள் தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. இந்தியா எல்லாவற்றுக்கும் தலைமை தாங்குகிறது. குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவை யான தடுப்பூசிகளை தயாரித்து கொடுக்கும் சக்தி இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.

இதனை ஏற்கனவே ஆஸ்திரேலிய தூதரும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 3 தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி தயாரிப்பை ஊக்கப்படுத்தினார். தடுப்பூசியை மட்டும் நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை, பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்