படப்பை அருகே, புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

படப்பை அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2020-12-16 04:00 IST
படப்பை,

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 24). இவருடைய மனைவி கற்பகம் (22). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கணவன்-மனைவி இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை சண்முகா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அலெக்ஸ் பாண்டியன் படப்பையில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கற்பகம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது இறந்த கற்பகத்திற்கும் கணவர் அலெக்ஸ் பண்டியனுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்