காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சரத்குமார் சாமி தரிசனம்
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.;
சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் வருகிற 22-ந்தேதி முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பின்னர் தேர்தல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த கருத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை. அவருடைய உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்க வேண்டும்.
அவருடைய கலை உலக பயணம் உள்ளிட்ட எந்த முயற்சியும் சிறப்பாக அமைய வேண்டும்.
நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.