ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Update: 2020-12-31 00:27 GMT
புதுக்கோட்டை,

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் வருவது ஆருத்ரா தரிசனமாகும். இந்த நாளில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆருத்ரா தரிசனத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. குறிப்பாக திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சாந்தநாத சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளம்

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்