நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகை நீலாயதாட்ச்ியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-12-31 02:38 GMT
நாகப்பட்டினம்,

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நேற்று மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. முன்னதாக நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாப்பொடி, கரும்புச்சாறு, பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. .

பாததரிசனம்

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு சுந்தரவிடங்க தியாகராஜர், நீலோத்பாலுக்கு 108 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் சாமிக்கு விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்கள் மற்றும் பட்டு சாற்றி அலங்கரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாத தரிசனம் நடைபெற்றது. .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமிகளுக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக சாமி வீதி உலா நடைபெறவில்லை. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தியாகராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்