“அரசியலுக்கு வரக்கூறிய எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன்” - சொந்த ஊரான பரமக்குடியில் கமல்ஹாசன் பேச்சு

“அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிய எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன்” என்று தனது சொந்த ஊரான பரமக்குடியில் கமல்ஹாசன் பேசினார்.

Update: 2020-12-31 17:56 GMT
பரமக்குடி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய இ்டங்களில் பிரசாரம் செய்தார். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பல்வேறு இடங்களில் ேநற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அவர், எமனேசுவரம், நேருஜி மைதானம், வைகை நகர், கிருஷ்ணா தியேட்டர் பகுதி, காந்திசிலை, பெரியகடை பஜார், பொன்னையாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த காரில் சென்று மக்கள் மத்தியில் பேசினார். அவரைக் காண ஏராளமான ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் கூடினர்.

வாகனத்தில் இருந்து கமல்ஹாசன் வெளியில் வந்ததும் திரண்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டு உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

எங்களது குடும்பம் பரமக்குடி. இங்கே கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக வாழ்கின்றனர். அவர்களது தறிகள் ஓய்ந்து போய் உள்ளன. அவற்றை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும். தேய்ந்து போய் உள்ள நெசவு தொழிலை மீட்டெடுக்க வேண்டும். பெண்கள், இளைஞர்களுக்கு வேலை தரும் முதலாளிகளாக உங்களை மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சிறிய ஊர்களை பெரிய ஊர்களுக்கு நிகராக மாற்றும் திட்டம் எங்களிடம் உள்ளது. அதை செய்யத்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பரமக்குடி என்பது நதிக்கரை நாகரிகம். ஆனால் அது தற்போது சாக்கடை நாகரிகமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் ஊழல் அரசியல். அதை அகற்ற வேண்டும். அதை அகற்றுவோம். தமிழகத்தை மீட்டெடுப்போம்.

நான் சினிமா நட்சத்திரமாக இருக்கலாம், இனி உங்கள் வீட்டில் எரியும் தீப விளக்காக இருக்க என்னை அனுமதியுங்கள். புதிய அரசியல் கட்சி, அரசியல் புரட்சி, உங்களை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. அதை தூக்கி பிடியுங்கள். நாளை நமதாகும். அரசியலுக்கு வரவேண்டும் என எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன். அரசியலுக்கு நான் வரும்பொழுது தொண்டை வறண்டது. கண்கலங்கியது. பாதாள சாக்கடை திட்டம் என்று சொல்லி இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி கூறிவருகின்றனர். ஆனால் நிைறவேற்றவில்லை.

நான் பரமக்குடியில் பிறந்தவர் என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் நான் இங்கு அரசு ஆஸ்பத்திரி வசதி இல்லாததால் ராமநாதபுரத்தில் பிறந்தேன். பரமக்குடியில் வளர்ந்தேன். 66 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலை தான் தற்போதும் நீடிக்கிறது. எல்லோரும் ஒரே படிப்பை படித்ததால் தான் இன்று அதிகமான என்ஜினீயர்கள் உள்ளனர். அந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு இளைஞரும் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக தான் எனது தந்தை பெயரில் பரமக்குடியில் ’ஸ்கில் டெவலப்மன்ட்’ என்பதை தொடங்கியுள்ளேன். மாற்றத்திற்கான அனைத்து பாதைகளும் இங்கு தெரிகிறது. நாளைய தலைவர்கள் இங்கு என் கண்முன்னே உள்ளனர். அதை நினைத்து கொண்டு அனைவரும் வாக்கு சாவடிகளுக்கு செல்ல வேண்டும்.

கல்விக்காக ஆண்டிற்கு ரூ.38 ஆயிரத்து 148 கோடி செலவு செய்வதாக அரசு தரப்பில் கூறுகின்றனர். அதன்படி பார்த்தால் ஒரு மாணவருக்கு 45 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது.இந்த பணத்தை நியாயமான முறையில் செலவு செய்திருந்தால் அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளைவிட நன்றாக வளர்ச்சி அடைந்து இருக்கும். எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி அரசு பள்ளிகளில் இடம் கிடைக்காதா? என்ற நிலையை ஏற்படுத்துவோம். மக்களின் ஓட்டை காசு கொடுத்து வாங்குகின்றனர். அதை மாற்ற வேண்டும்.

மக்களை செழுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் நீங்கள் வழுக்கி விழுந்தாலும் வறுமைக் கோட்டிற்கு செல்ல மாட்டீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கமல்ஹாசன், ெதளிச்சாத்தநல்லூரில் மக்கள் நீதிமய்யம் கட்சி ெகாடிைய ஏற்றினார். பிரசாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட ெசயலாளர் வக்கீல் தேவராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் அருப்புக்ேகாட்ைட ெசன்றார்.

மேலும் செய்திகள்