நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் திருவிழா

வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமானது நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் திருவிழாவையொட்டி கிராமமக்கள் நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்தனர்.

Update: 2021-01-08 01:16 GMT
வேலாயுதம்பாளையம்,

வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமானது நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் திருவிழாவையொட்டி கிராமமக்கள் நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்தனர். பின்னர் சுவாமியை பல்லாக்கில் வைத்து தூக்கி வந்து விநாயகர் கோவிலில் வைத்தனர். பின்னர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. கடந்த 4-ந்தேதி வடிசோறு வைத்துஅம்மனை வழிப்பட்டனர். கடந்த 5-ந்தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடந்தது. 6-ந்தேதி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து. நேற்று அம்மனை அலங்காரத்துடன் பல்லாக்கில் வைக்கப்பட்டது. பின்னர் கண்டியன்னூர், மலைவீதி, அண்ணாநகர், காந்திநகர், முல்லை நகர், சுந்தரம்மாள் நகர் ஆகியவீதிகளின் வழியாக வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் அம்மனை நாணப்பரப்பு கோவிலுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்