அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.;

Update:2021-01-08 07:51 IST
அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
திருச்சி,

14-வது ஊதிய ஒப்பந்தத்தினை உடனடியாக பேசி முடித்திட வேண்டும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத்தொகை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவரும், தொ.மு.ச. மண்டல பொதுச் செயலாளருமான குணசேகரன் தலைமை தாங்கினார்.

காத்திருப்பு போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. காத்திருப்பு போராட்டம் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு, போக்குவரத்தை சீர்படுத்தினர்.

மேலும் செய்திகள்