நீட் பயிற்சி வகுப்பில் சரியாக படிக்காததால் விபரீதம்; பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நீட் பயிற்சி வகுப்பில் சரியாக படிக்காததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-01-10 04:48 IST
நீட் பயிற்சி வகுப்பில் சரியாக படிக்காததால் விபரீதம்; பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பிளஸ்-2 மாணவி
பம்மல், கிருஷ்ணா நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் விநாயகம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜனனி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி, அடையாறில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தின் ஆன்லைன் வகுப்பில், மகள் ஜனனியை விநாயகம் சேர்த்துள்ளார். இதையடுத்து பயிற்சி மைய ஆன்லைன் வகுப்புக்கு சென்று வந்த நிலையில், மகள் சரியாக படிக்கவில்லை என்று கூறி விநாயகம் வருத்தம் அடைந்து பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் விநாயகம் மற்றும் குடும்பத்தினர், எழுந்து பார்த்தபோது, ஜனனி, தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சாவு
உடனே அவரை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜனனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகம் சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர். நீட் பயிற்சி மையத்தில் சரியாக படிக்காததால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்