காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்து முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.

Update: 2021-01-16 20:30 GMT
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி பார்வையிட்டபோது
கொரோனா தடுப்பூசி
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.

காஞ்சீபுரம் அரசு அரசு ஆஸ்பத்திரி, திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

300 பணியாளர்கள்
தலா 100 மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 300 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. தடுப்பூசி போடப்பட்ட அனைவரும் அரை மணிநேரம் கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ஜீவா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நந்திவரம்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பொது சுகாதார கூடுதல் இயக்குனர் சேகர் தொடங்கி வைத்து செவிலியர்கள், ஆரம்ப சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.

அப்போது அவருடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை துணை இயக்குனர் பிரியா ராஜ், வட்டார மருத்துவர் ராஜேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி, சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், ஆனந்தராஜ் உள்பட மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்