செங்கோட்டை அரசு நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

செங்கோட்டை அரசு நூலகத்தில் குற்றாலம் ரோட்டரி கிளப் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில், பொங்கல் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது.

Update: 2021-01-16 21:00 GMT
வாசகர் வட்டத்தலைவா் பொறியாளா் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணைச்செயலாளா் நல்லாசிரியா் செண்பக குற்றாலம், துணை செயலாளா் சலீம், துணைத்தலைவர் ஆதிமூலம், குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் ஸ்டாலின் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நல்நூலகா் ராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பின்னா் ‘பூக்கட்டும் புதுவசந்தம்’ எனும் தலைப்பில் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கான கவிதை போட்டி, ஓவியப்போட்டி நடந்தது. அதன்பிறகு பாடலாசிரியா் தண்டமிழ்தாசன் பா.சுதாகா் எழுதி பாடி, ஹரிஹரசுதன் இசையமைத்து மனீஷ்குமார் படத்தொகுப்பில் உருவான ‘பொங்கட்டும் பொங்கல்’ இசைப்பாடல் ஆடியோ வீடியோவை குற்றாலம் ரோட்டரி கிளப் துணை ஆளுனா் பெருமாள் வெளியிட, ஜெ.பி. கல்லூரி முதல்வா் சுரேஷ் ஜான்கென்னடி பெற்றுக்கொண்டார். தொடா்ந்து கவிதை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பள்ளிகள் நலச்சங்க தென்காசி மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மோதிலால் நேரு, பள்ளி தாளாளர் லதா ராஜகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இலஞ்சி குமரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் சதீஸ், தென்மண்டலசெயலாளர் ந.ஆனந்தக்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்பிராங்க்ளின் ஜோஸ் ஆகியோர் கலந்து 
கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினர். சமத்துவபொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினர். மாவட்ட பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

* விக்கிரமசிங்கபுரம் அந்தோணியார் அறக்கட்டளை சார்பில், ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடையகருங்குளம் அந்தோணியார் அறக்கட்டளையின் சார்பில் பங்குதந்தை சைமன் செல்வன் கலந்துகொண்டு புத்தடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் மரிய மைக்கேல், சுப்பிரமணியன், முருகேஷ்வரி, சட்ட ஆலோசகர் ஆண்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். புத்தாடைகளை வாங்க உதவி செய்த மலேசியா மோகன், மலேசியா டாக்டர் வாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்