சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து மாமல்லபுரத்தில் மத்திய குழு ஆய்வு

சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-01-17 23:00 GMT
மாமல்லபுரம், 

மராட்டியம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று மாமல்லபுரம் வந்தனர்.

கடற்கரை கோவில் அருகில் மத்திய குழுவினரை செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் வரவேற்றனர்.

பின்னர் அந்த குழுவினர் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மத்திய குழுவில் வந்திருந்த வடமாநில எம்.பி.க்களுக்கு மாமல்லபுரம் பல்லவர் கால வரலாற்று புராதன சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை அரசு அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் தனித்தனியாக விளக்கி கூறினர்.

புராதன சின்னங்கள் பற்றிய அரிய தகவலர்களை ஒவ்வொரு எம்.பி.யும் குறிப்பு எடுத்து கொண்டனர்.

மத்திய குழுவினருடன் மாமல்லபுரம் தொல்லியல் துறை உதவி அலுவலர் ரவிச்சந்திரன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பர்வதம், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்