வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா

வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா நடந்தது.

Update: 2021-01-31 01:30 GMT
பனைக்குளம், 
 மண்டபம் யூனியன் பட்டினம்காத்தான் ஊராட்சியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.  விழாவில் பட்டினம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ராமநாதபுரம் தாலுகா வீட்டு வசதி கூட்டுறவு சங்க தலைவர் மருதுபாண்டியன் மற்றும் பட்டினம்காத்தான், ராம்நகர், கலெக்டர் அலுவலக குடியிருப்பு, பாரதி நகர், ஆயுதப்படை குடியிருப்பு, சுப்பையா நகர், ஓம் சக்தி நகர், டி பிளாக், நேரு நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்