பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அாியலூாில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-01-31 05:45 GMT
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரியலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் நகராட்சி ஆணையர் மனோகரன் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்கி வருகிறது. அவற்றை பெற்று பெண்களாகிய நீங்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மற்ற பெண்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். பின்னர் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்து முகமது, மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் மாவட்ட மகளிர் நல அலுவலர் வனத்தம்மாள், ஒருங்கிணைப்பாளர் இந்துமதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்