மாணவ, மாணவிகளுக்கு சிலம்ப போட்டி

மாணவ, மாணவிகளுக்கு சிலம்ப போட்டி நடைபெற்றது.;

Update:2021-02-01 10:49 IST
ஜெயங்கொண்டம், 

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றாக விளங்கும் சிலம்பக்கலை தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இக்கலையை மீட்டெடுக்கும் விதமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமத்தில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, தற்காப்புக் கலை பயிற்றுவிக்கும் வகையில், வீட்டில் முடங்கியிருந்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த 6 மாத காலமாக பயிற்சியாளரை கொண்டு சிலம்பம் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த கிராமத்தில் சிலம்ப கலை சங்கமிக்கும் அரங்கேற்ற விழா என்ற பெயரில் போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இப்போட்டியில் 10 வயது சிறுவர் முதல் 80 வயது முதியவர் வரை பங்கேற்று சிலம்பத்தை சுழற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்