கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேற்று கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2021-02-01 18:38 GMT
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. 

இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். 

கடந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி நீர்வரத்து அதிகரித்தது. 

மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டது. 

இதையடுத்து கடந்த 11 மாதங்களுக்கு பிறகு, கும்பக்கரை அருவிக்கு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். 

அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.  

அருவியில் நீர்வரத்து சராசரியாக இருந்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்