வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு

வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போனது.;

Update:2021-02-02 01:24 IST
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கரயான்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 39). இவர் நேற்று அவரது உறவினரின் வீட்டு திருமண விழாவிற்காக ஏலாக்குறிச்சிக்கு குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த மேஜை டிராயர் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. வீட்டின் வெளிக்கதவு பூட்டிய படியே இருந்ததால் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் மாடி வழியாக வீட்டுக்குள் வந்திருக்கலாம் என்று இராமலிங்கம் தெரிவித்தார். இது குறித்து   ராமலிங்கம் அளித்துள்ள புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த திருமானூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்