விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2021-02-03 01:22 GMT
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு்தோறும் தை மாதம் பக்தர்கள் திருமணம், குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.  அப்போது வேண்டுதல் நிறைவேண்டி பக்தர்கள் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 

மண்சோறு
அந்த வகையில் 22-வது ஆண்டாக நேற்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஜெகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு சமயபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஜெகமுத்து மாரியம்மனுடன் ஜங்சன் சாலை, பாலக்கரை, கடைவீதி, தென்கோட்டை வழியாக ஊர்வலமாக விருத்தகிரீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு கலை நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் ஜெகமுத்து மாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து பம்பை மேளதாளத்துடன் தாலாட்டுப்பாடல் பாடப்பட்டது. அப்போது சமயபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடினர். அதன்பிறகு தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

மேலும் செய்திகள்