அரியலூர் பஸ் நிலையம் அருகே தமிழக அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரம் வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும், ஒருமாத தொகையை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.