வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காட்டுப்பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.;

Update:2021-02-07 06:55 IST
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலத்தான்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இடையே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் நேற்று ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக ெதாங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் ெதாங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் சக்திவேல் (வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்