அரியலூரில் 5-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம்

அரியலூரில் 5-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினா்.;

Update:2021-02-07 07:12 IST
அாியலூர்,

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பஞ்சாபகேசன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அவர்களை அரியலூர் போலீசார் தடுத்து, 19 பெண்கள் உள்பட 42 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்