கருத்தரங்கம்
ஜெயங்கொண்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி தலைமை தாங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார், உட்கோட்டை, மீன்சுருட்டி, தண்டலை உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.