சமைத்தபோது உடலில் தீப்பற்றி இளம்பெண் சாவு
சமைத்தபோது உடலில் தீப்பற்றி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.;
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி வினோதினி(வயது 30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 11-ந் தேதி வீட்டில் சமைத்தபோது வினோதினியின் உடையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது. இதில் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வினோதினி, பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வினோதி இறந்தார். இது குறித்து அவருடைய தந்தை மாதவன், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.