காஞ்சீபுரம் அருகே பொக்லைன் எந்திர பாகங்களை திருடிய 5 பேர் சிக்கினர்
காஞ்சீபுரத்தை அடுத்த நீர்வள்ளுர் பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை மர்மநபர்ககள் திருடி சென்று விட்டனர்.;
இது குறித்து பாபு காஞ்சீரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில் மணிமங்கலம் பகுதியிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை போலீசார் கைப்பற்றினர். பொக்லைன் எந்திரத்தின் பாகங்கள் திருடப்பட்டிருந்தது. திருட்டில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம் தேவன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (வயது 24), மேலத்தெருவைச் சேர்ந்த செல்வம் (22), கிழக்கு தாம்பரம் வியாசர் தெருவை சேர்ந்த தர்மராஜன் (55), இரும்புலியூர் பாலாஜி நகரை சேர்ந்த குணசேகரன் (31), பல்லாவரத்தை சேர்ந்த சாமுவேல் (37) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் 5 பேரும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.