விபத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சாவு

விபத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2021-02-15 23:14 IST
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 55). இவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8-ந் தேதியன்று ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்திற்கு பணி நிமித்தமாக சென்றுவிட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தார். சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வேகத்தடை அருகே வந்தபோது சாலையை கடக்க முயன்ற முதியவரை காப்பாற்றும் நோக்கில் பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்ததில் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த முதியவருக்கும் பலத்த அடிபட்டது. இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்