தி.மு.க. நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த ஊர்க்காவல் படை வீரர்

தி.மு.க. நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வீரர் மயங்கி விழுந்தார்.;

Update:2021-02-15 23:23 IST
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் தி.மு.க. சார்பில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு பணியில் அரியலூர் மாவட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர். மதியம் 3 மணி அளவில் கடும் வெயிலில், நுழைவுவாயிலில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊர்க்காவல் படை வீரரான ராஜ்மோகன் என்பவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் அவரை தூக்கி வந்து நிழலில் படுக்க வைத்து தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்