ஆபத்தான பாலத்தால் பொதுமக்கள் அவதி

கமுதி அருகே ஆபத்தான பாலத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2021-02-16 16:45 GMT
கமுதி, 
கமுதி அருகே ஆபத்தான பாலத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆபத்தான பாலம்

கமுதி யூனியனுக்கு உட்பட்டது பேரையூர் ஊராட்சி. இதில் 8 கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊரின் மையத்தில் உள்ள ஆஸ்பத்திரி பாலம் கடந்த 1934-ம் ஆண்டு இலந்தைகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு மழை தண்ணீர், ஆற்று வெள்ளம் செல்ல வசதியாக கட்டப்பட்டதாகும். 
மிகவும் குறுகலான இந்த பாலத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிமெண்டு ஏற்றி வந்த லாரி விபத்திற்கு உள்ளாகி கவிழ்ந்ததில் ஒரு பக்க தடுப்புச்சுவர் சேதமடைந்தது. மராமத்தும் செய்யப்பட்டது. நல்ல வேளையாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மற்றொரு பகுதியும் சேதமடைந்து விழுந்து தண்ணீர் செல்லும் பாதையிலேயே கிடக்கிறது. 
நடவடிக்கை

பாலத்தின் உறுதித்தன்மை முற்றிலுமாக சிதைந்து எப்போதும் விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி தலைவர் ரூபி கேசவன், ஊராட்சி செயலர் ரமேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலமுறை இதுபற்றி உயர் அதிகாரி  களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையே உள்ளது. 
எனவே ஏதாவது விபரீதம் நேரும் முன் இதனை மராமத்து செய்யவோ அல்லது புதிய பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல பேரையூர் கண்மாய் பாலமும் சேதமடைந்து வருகிறது. இந்த பாலத்தையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்