திண்டிவனம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
திண்டிவனம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் நகை திருடு போனது.;
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (வயது 45). கட்டிட தொரிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி உத்திரமேரூர் அருகில் உள்ள வெள்ள புத்தூரில் உள்ள த னது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அவரது மகள் ரோஷினி என்பவர் மட்டும் வீட்டில் இருந்தார்.
திண்டிவனம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும், ரோஷினி நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, 9 கிராம் தங்க நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.