மதுவிலக்கு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

மதுவிலக்கு போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.;

Update:2021-02-17 00:07 IST
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இதில் அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறினர். கள்ளச்சாராயம் தயாரித்தல், விற்பனை செய்தல், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தல், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்தல் அல்லது பயன்படுத்துதல் போன்றவை பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்க 10581 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. தா.பழூரில் சுத்தமல்லி பிரிவு சாலை, இடங்கண்ணி பிரிவு சாலை, கடைவீதி போன்ற பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

மேலும் செய்திகள்