பள்ளியில் பாரம்பரிய முறைப்படி மரம் வளர்க்கும் பணி

பள்ளியில் பாரம்பரிய முறைப்படி மரம் வளர்க்கும் பணி தொடங்கப்பட்டது.;

Update:2021-02-17 00:08 IST
கீழப்பழுவூர், பிப்.17-
திருமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய முறைப்படி மரம் வளர்க்க மரக்கிளைகளை நடும் பணியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி ராணி தலைமை தாங்கினார். இதில் மரக்கிளைகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டு, புங்கை, முருங்கை, பூசனை, வேம்பு உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரங்களின் கிளைகள் நடப்பட்டன. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசம்பாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்