சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2021-02-17 00:16 IST
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா நடந்தது. கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
மார்க்கெட் தெரு, தேரடி, எம்.பி.கோவில் தெரு, சத்திரம் வழியாக சென்ற ஊர்வலம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு சாலை பாதுகாப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் சாலை பணியாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்