மகன் கைதுக்கு பா.ம.க.வின் தூண்டுதலே காரணம்; குருவின் மனைவி குற்றச்சாட்டு

மகன் கைதுக்கு பா.ம.க.வின் தூண்டுதலே காரணம் என்று குருவின் மனைவி குற்றம்சாட்டினார்.;

Update:2021-02-17 00:50 IST
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவரான மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. குருவின் மனைவி சொர்ணலதா. இவர் நேற்று குருவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது மகன் கனலரசன் செய்த தவறு என்ன? எதற்காக அவரை கைது செய்தார்கள் என்ற விவரம் எனக்கு தெரிய வேண்டும். அவரது வளர்ச்சி பொறுக்காமல், பா.ம.க.வின் தூண்டுதலின்பேரில் எனது மகனை கைது செய்துள்ளனர். இதுவே எனது கணவர் காடுவெட்டி குரு இருந்திருந்தால், இப்படி செய்வார்களா? அல்லது செய்ய முடியுமா?. அவருடைய பிறந்த நாளையொட்டி எதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அதை ரத்து செய்ய வேண்டும். வன்னியர் சங்கத்திற்கும், கட்சி வளர்ச்சிக்கும் எனது கணவர் விட்டுச்சென்ற பணிகளை எனது மகன் எடுத்து செய்வதில் என்ன தவறு இருக்கிறது. கனலரசனை விடுதலை செய்யவில்லை என்றால் அடுத்த கட்டமாக தொண்டர்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

மேலும் செய்திகள்