சிறுமிக்கு திருமணம் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு;

Update:2021-02-17 02:13 IST
மதுரை,
மதுரையில் உள்ள ஒரு கோவிலில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி ஒருவருக்கு கட்டாய திருமணம் நடந்ததாக மதுரை கிழக்கு சமூக நல அதிகாரிக்கு தகவல் வந்தது. உடனே அவர் இது குறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த மாதம் கோடீஸ்வரன் (வயது 26) என்பவருக்கு சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கோடீஸ்வரன், அவரது தந்தை, தாய் மற்றும் சிறுமியின் தாய், தந்தை என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்