சட்டப்பணிகள்ஆணைக்குழு ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-02-16 21:31 GMT
கடலூர் 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி 14 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற கைதிகளின் வழக்கு குறித்து ஆய்வு செய்ய தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டது.அதன்பேரில், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலாளரும், நீதிபதியுமான ராஜசேகர் கடலூர் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகளிடம் எந்த வழக்கிற்காக சிறைக்கு வந்தீர்கள், உங்களுக்கு சட்ட உதவிகள் ஏதேனும் தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து அவர், கடலூர் மகளிர் கிளைச்சிறையிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் ஏ.ஆர்.டி. மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து சிதம்பரம், விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கிளைச்சிறையிலும் ஆய்வு மேற்கொண்டார்.

மாற்றுத்தீர்வு மைய அலுவலகம்

முன்னதாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத்தீர்வு மைய அலுவலகத்திலும் உறுப்பினர் செயலாளர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது நீதிபதிகள் செம்மல், ஜோதி, சங்கர், பட்டியல் வக்கீல் கருணாகரன், கடலூர் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், சிதம்பரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான நீஷ், சிதம்பரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்ராஜ், சட்டப்பணிகள் குழுவின் பட்டியல் வக்கீல்கள் பட்டுராஜன், செந்தில், சுகந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர்கள் சந்தோஷ் குமார், வெங்கடேசன், மாவட்ட மக்கள் நீதிமன்ற முதுநிலை நிர்வாக உதவியாளர்கள் சையத்ரஷீத், அஸ்வத்தராமன், இளநிலை நிர்வாக உதவியாளர்கள் புவனேஸ்வரி, தியாகபிரியன், ஜெதீசன், ஆனந்த ஜோதி  ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்