இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update:2021-02-18 00:34 IST
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜஸ்டின் அமல்ராஜ், சசிகுமார், பொன்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பல நாட்களை கடந்த மற்றும் நோயுற்ற ஆடுகள், கோழிகள் வெட்டப்பட்டு விற்கப்படுகிறதா கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இறைச்சி விற்கும் இடங்கள் சுகாதாரமான முறையில் இருக்கிறத இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 3 கிலோ அளவிலும் மற்றும் நாள்பட்ட இறைச்சி 5 கிலோ அளவிலும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்