அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-02-17 19:10 GMT
அரியலூர்
அரியலூரில், 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அண்ணாசிலை அருகே ஊர்க்காவல் படையினரின் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இதற்கு, ஊர்க்காவல்படை கமாண்டர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அண்ணா சிலை அருகே தொடங்கிய ஊர்வலம் தேரடி, எம்.ஜி.ஆர். சிலை, சத்திரம் வழியாக சென்று காமராஜர் திடலில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்க கூடாது. தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டு இல்லையேல் பின்னால் வரும் 108, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதே போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும், 56 விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்