உழவர் உற்பத்தியாளர் மைய உறுப்பினர்களுக்கு சான்றிதழ்
உழவர் உற்பத்தியாளர் மைய உறுப்பினர்களுக்கு சான்றிதழ்;
ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, வரதராஜன்பேட்டை கிராமத்தில் நபார்டு வங்கி, கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஆண்டிமடம் எண்ணெய் வித்து உழவர் உற்பத்தியாளர் மையம் தொடங்கப்பட்டு அதற்கான உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மையத்தின் முதுநிலை விஞ்ஞானி அழகுகண்ணன் தலைமை தாங்கி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, உழவர் உற்பத்தியாளர் மையத்தின் முக்கியத்துவம் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். உழவர் உற்பத்தியாளர் மையத்தின் இயக்குனர் அந்தோணிசாமி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், ஆசைத்தம்பி, மதிப்புக்கூட்டல் மையத்தின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், உறுப்பினர்கள் தங்களின் சந்தேகங்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். கூட்டத்திற்கு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் ராஜா ஜோஸ்லின், ராஜ்கலா, சோபனா ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தனர். கூட்டத்திற்கு 40-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மையத்தின் உறுப்பினர் பங்கிராசு நன்றி கூறினார்.