22 மயில்கள் இறந்த சம்பவம்: பெண் கைது

22 மயில்கள் இறந்த சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-02-18 02:49 IST
மணப்பாறை, 
மணப்பாறையை அடுத்த வடகாட்டாம்பட்டி பகுதியில் உள்ள ராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 15-ந்தேதி 22 மயில்கள் இறந்து கிடந்தன. இதையடுத்து வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்ட பின் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தபின் மயில்கள் புதைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ராசு மற்றும் பொன்னம்மாள் என்ற சின்னப்பொண்ணு ஆகியோர் மீது மணப்பாறை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் ராசு தலைமறைவானார். சின்னப்பொண்ணை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்