சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பள்ளியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் கங்காதேவி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம், மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் விளக்கி பேசினார். இதில் போலீசார், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.