வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை தங்கும் விடுதியில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை;

Update:2021-02-26 02:49 IST
வி.கைகாட்டி:

தூக்கில் தொங்கினார்
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் ரகுராஜ்நகர் கிராமத்தில் உள்ள ஜவஹர் நகரை சேர்ந்தவர் கிஷான்ரயல்ராய்க்கர். இவருடைய மகன் ரவிராய்க்கர்(வயது 26). இவர் அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையத்தில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார்.
ரவிராய்க்கர் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு நேற்று முன்தினம் ஆலைக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சென்றார். ஆனால் நேற்று காலை அவர் வழக்கம்போல் பூச்சி மருந்து அடிக்கும் பணிக்கு செல்லவில்லை. இதனால் அருகே உள்ள அறையில் இருந்த கூலித்தொழிலாளர்கள், ரவிராய்க்கர் அறை கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரவிராய்க்கர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.
விசாரணை
இது குறித்து அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை நிர்வாகம் சார்பில் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், ரவிராய்க்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்