விவசாயிகளுடன் மாணவிகள் கலந்துரையாடல்

விவசாயிகளுடன் மாணவிகள் கலந்துரையாடல்;

Update:2021-03-01 00:55 IST
அருப்புக்கோட்டை, 
மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இளங்கலை இறுதியாண்டு வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் புலியூரான் வருவாய் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுடன் அவர்களது விவசாய அனுபவங்கள் குறித்து கலந்துரையாடினர். வேளாண்மை கல்லூரி மாணவிகள் கார்த்திகா, கவுசல்யா, லட்சுமி, மகாலட்சுமி, நந்தினி, நஸ்ரத் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடம் விவசாய நுட்பம் குறித்து கேட்டறிந்தனர். அப்ேபாது உதவி வேளாண் அலுவலர் பெரியகருப்பன், தனியார் பயிர் காப்பீட்டு முகவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்