திருவள்ளூரில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனை

தமிழகத்தில் சட்டமன்ற தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

Update: 2021-03-01 06:21 GMT
திருவள்ளூர், 

தமிழகத்தில் சட்டமன்ற தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க வட்டாட்சியர் தலைமையில் மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படை, 30 நிலை கண்காணிப்புக்குழு என மொத்தம் 60 தேர்தல் பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நியமனம் செய்யப்பட்டு 3 பிரிவுகளாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருவள்ளூர் தொகுதி எல்லையான நரசிங்கபுரம் பகுதியில் தோட்டக்கலை அலுவலர் அதியமான் மற்றும் தலைமை காவலர் சண்முகம், மணிகண்டன், ஜெயஸ்ரீ உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படைக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், வரும் நாள்களில் கூடுதல் பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்