குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு;

Update:2021-03-02 00:03 IST
களியக்காவிளை:
குழித்துறையை அடுத்த மீனச்சல் பகுதியை சேர்ந்த தெவுஹித்ரி மகன் நீரஜ் (வயது 8). அந்தபகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மீனச்சல் முதுவளி குளத்தில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரஜ் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.  இதை கண்ட அந்த பகுதியினர் சிறுவனை மீட்டு பாறசாலை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், நீரஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்