வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்

வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்;

Update:2021-03-02 00:49 IST
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. சதுரகிரி மலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தவசிப்பாறை வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் வனத்துறையினர் சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக அணைத்தனர்.

மேலும் செய்திகள்