பரமத்திவேலூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பரமத்திவேலூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.;

Update:2021-03-03 00:42 IST
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெங்கமேடு பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தனியார் இடத்தில், செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடந்தன. இதுகுறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டனர். மேலும் அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க இடம் வழங்கிய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பொதுமக்களை பாதிக்காத வகையில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்