மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்யக்கோரி மனு

மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.;

Update:2021-03-03 01:18 IST
தாமரைக்குளம்:
திருமானூரை அடுத்த கரைவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெல்மணிகளை எடுத்துக்கொண்டு, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கலெக்டர் ரத்னாவிடம் நெல்மணிகளை காண்பித்து, மனு அளித்தனர். அந்த மனுவில், திருமானூர் ஒன்றிய பகுதிகளில் தற்போது சம்பா நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தொடர்மழையின் காரணமாக பல விவசாயிகளின் நெல் பூஞ்சான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். எனவே, கலெக்டர் சிறப்பு அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்