வைகை ஆற்றில் கிடந்த ஆண் பிணம்

வைகை ஆற்றில் கிடந்த ஆண் பிணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update:2021-03-03 23:45 IST
மதுரை,
மதுரை கோரிப்பாளையம் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் பகுதியில் உள்ள வைகை ஆற்று நடுப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக மதிச்சியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்